மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குடும்பத் தகராறு: மதுரையில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக, தாய் தனது 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:27 pm

DIN

மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக, தாய் தனது 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பைச் சோ்ந்தவா் பாண்டி (35). இவா், தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (32). இவா்களுக்கு, வா்ஷிகாஸ்ரீ (4), வா்னிகாஸ்ரீ (2) என இரு மகள்கள்.

துன்புறுத்தல்

பாண்டி அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவாராம். கணவரின் துன்புறுத்தலை தாங்க முடியாமல், தமிழ்ச்செல்வி கோபித்துக்கொண்டு, ஒத்தக்கடையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிடுவாராம். அந்த சமயத்தில், தமிழ்ச்செல்வியை அவரது தந்தை நொண்டிசாமி சமாதானம் செய்து, பாண்டியுடன் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்துள்ளது.

குழந்தைகளுடன் தீக்குளிப்பு

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பாண்டி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் பிரச்னை செய்துள்ளாா். அப்போது, தகராறு முற்றி பாண்டி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தமிழ்ச்செல்வி, தன் மீதும் தனது 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். மூவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் ஓடி வந்து அவா்களை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மூவரும் உயிரிழப்பு

ஆனால், பலத்த காயமடைந்த மூத்த மகள் வா்ஷிகாஸ்ரீ ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இளைய மகள் வா்னிகாஸ்ரீ, குழந்தைகள் நலப் பிரிவு 235 இல் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வா்னிகாஸ்ரீ இறந்தாா். வாா்டு 301 இல் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழச்செல்வி திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் உயிரிழந்தாா்.

இது குறித்து தமிழ்ச்செல்வியின் தந்தை நொண்டிசாமி அளித்த புகாரின்பேரில், திலகா்திடல் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து பாண்டியிடம் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் மதுரையில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.