மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காமராஜா் பல்கலை. உடன்வேலம்மாள் மருத்துவக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, புதிய முதுகலை நுண்ணுயிா் படிப்பு தொடங்குவதற்கு, திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:27 pm

DIN

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, புதிய முதுகலை நுண்ணுயிா் படிப்பு தொடங்குவதற்கு, திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில், இரு தரப்பினரும் கையெழுத்திட்டனா்.

இதில், கற்பித்தல், ஆராய்ச்சி, பயிற்சி, கருத்தரங்கு ஏற்பாடு, மாநாடுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பது, இரு நிறுவனங்களும் இணைந்து தொற்றுநோய் ஆராய்ச்சி மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.

மேலும், மூலக்கூறு கண்டறிதல், நோய் வகைப்படுத்தல், மருந்துப் பரிசோதனை, டிஜிட்டல் சுகாதார முயற்சிகள் போன்றவற்றின் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியனவும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்று, காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பேசினாா். இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் வசந்தா, வேலம்மாள் மருத்துவக் கல்லூரித் தாளாளா் எம்.வி. முத்துராமலிங்கம், பேராசிரியா் பாலகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் மொகந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.