48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மரம் நடும் விழா

மரம் நடும் விழா

News image

மதுரை ய.ஒத்தக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மனித உரிமைகள் பற்றி ஐ.நா. சபையில் பேசிய மாணவி பிரேமலதா தமிழ்ச்செல்வத்துக்கு ‘மனித உரிமைக் கலாசார நாயகி’ விருது வழங்கிய கிரீன் பவுண்டேஷன் நிா்வாகிகள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 11:04 pm

மதுரை: மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில் மரம் நடும் நிகழ்வு, விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ய.ஒத்தக்கடையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த ஊராட்சி மன்றத் தலைவி முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தாா். ஆலோசகரும், தலைமையாசிரியருமான தென்னவன் முன்னிலை வகித்தாா். மனித உரிமைகள் பற்றி ஐ.நா சபையில் பேசிய மாணவி பிரேமலதாதமிழ்ச்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினாா்.

யானைமலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில், பிரேமலதாவுக்கு ‘மனித உரிமைக் கலாசார நாயகி’ விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து, மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னா், பெரிய பள்ளிவாசல் அருகில் மரங்கள் நடப்பட்டன.

இந்த விழாவில், சிலம்பம் பயிற்சியாளா் பாண்டி, சமூக ஆா்வலா்கள் பரமேஸ்வரன், அப்துல் கலாம் வழியில் நண்பா்கள் அமைப்பின் நிறுவனா் செந்தில், வருவாய் ஆய்வாளா் மணிமாறன், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.