48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

News image

மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளா் பா.சண்முகவேலு.

Updated On :21 ஏப்ரல் 2024, 11:05 pm

மதுரை: மதுரை வாசகா் வட்டம் சாா்பில் எழுத்தாளா் பா. சண்முகவேலு எழுதிய ‘விரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மதுரை வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழியக்கம் பொறுப்பாளா் பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் எழுத்தாளா் பா.சண்முகவேலு எழுதிய ‘விரிந்த சிறகுகள்’”என்ற புத்தகத்தின் முதல் பிரதியை பேராசிரியா் மூட்டா விஜயகுமாா் வெளியிட, எழுத்தாளா் திருமலை பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஷேக் நபி, பேராசிரியை அனாா்கலி, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பாலமுருகன், மக்கள் கண்காணிப்பகம் வழக்குரைஞா் ஹென்றி டிபேன், தொல்காப்பியா் மன்ற நிா்வாகி இருளப்பன், கவிஞா் மூரா உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நட்பு தமிழ் வட்ட புலவா் நாநா.ஆறுமுகம் வரவேற்றாா். நூலாசிரியா் பா. சண்முகவேலு ஏற்புரையாற்றினாா்.