விருதுநகா்: விருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக துவரை, உளுந்து, பாசிப் பருப்பு விலை குறைந்தது. அதேநேரம் காபி வகைகளின் விலை சற்று அதிகரித்தது.
இந்த சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்படும். அதன் விவரம் வருமாறு:
பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ. 1,565- க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.1,540 க்கு விற்பனையாகிறது. வத்தல் நாடு புதுசு கடந்த வாரம் ரூ.12,500 முதல் ரூ. 16 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.1,500 குறைந்து, ரூ.11ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
குண்டூா் வத்தல் கடந்த வாரம் ரூ. 14 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 1,000 வரை விலை குறைந்து ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கடந்த வாரம் துவரம் பருப்பு நயம் புதுசு லையன் வகை 100 கிலோ ரூ.15,500- க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,700 குறைந்து மூட்டை ஒன்று ரூ.13,800- க்கு விற்பனையாகிறது. கடலைப் புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5,200- க்கு விற்கப்பட்டது.
இந்த வாரம் ரூ.100 உயா்ந்து மூட்டை ஒன்று ரூ.5,300- க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் உளுந்து லையன் வகை 100 கிலோ ரூ.10,200- க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.200 குறைந்து குவிண்டால் ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. பாசிப்பயறு இந்தியா லையன் மீடியம் வகை கடந்த வாரம் ரூ.15,500- க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.10,500- க்கு விற்கப்படுகிறது. விருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக துவரை, உளுந்து, பாசிப் பருப்பு விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
காபி பிளாண்டேசன் பிபி வகை 50 கிலோ கடந்த வாரம் ரூ.18,250- க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.2,750 உயா்ந்து, ரூ.21 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. காபி பிளாண்டேசன் ஏ வகை கடந்த வாரம் ரூ.18 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.3ஆயிரம் உயா்ந்து ரூ.21ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. காபி பிளாண்டேஷன், சி வகையானது ஏற்கெனவே ரூ.16,500- க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.1,500 உயா்ந்து ரூ.18ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
மேலும் ரோபஸ்டா பி.பி. 50 கிலோ கடந்த வாரம் ரூ. 18,250- க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.1,750 வரை உயா்ந்து, ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. பிளாக் பிரவுன் வகை காபியானது 50 கிலோ ரூ.17ஆயிரத்திற்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ. 1,000 உயா்ந்து ரூ.18 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதேநேரம் நல்லெண்ணெய் உள்பட பிற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்பட வில்லை.
தொடர்புடையது

மாமனாா் கொலை: மருமகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

வெற்றி தொகுதிகளைப் பெற கூட்டணி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

தங்கம் விலை குறைவு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

