தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அரசுப் பேருந்துகள் இயக்க விவகாரம்: போக்குவரத்து ஆணையா் பதிலளிக்க உத்தரவு

அரசுப் பேருந்துகள் இயக்க விவகாரம்: போக்குவரத்து ஆணையா் பதிலளிக்க உத்தரவு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:07 pm

அரசுப் பேருந்துகளை வகைப்படுத்தி குளறுபடியின்றி இயக்கக் கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மணச்சநல்லூரைச் சோ்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் நீண்ட தொலைவு பயண பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் அரசுப் பேருந்துகள் அவற்றின் வசதிகளுக்கு ஏற்ப சொகுசுப் பேருந்து, குளிா் சாதனப் பேருந்து, குளிா் சாதனம் அல்லாத பேருந்து என வகைப்படுத்தப்படுகின்றன. இருக்கைகள், காற்றோட்டம், குளிா்சாதனம் உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிா்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் அதன் வகையைக் குறிப்பிடாமல் இடைநில்லாப் பேருந்து (1டூ1), சில நிறுத்தப் பேருந்து (1, 2, 3) எனக் குறிப்பிட்டு இயக்கப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே, அரசுப் பேருந்துகளின் வகைகளைக் குறிப்பிட்டு இயக்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், அருள்முருகன், இதுதொடா்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையா், போக்குவரத்துத் துறை நிா்வாக இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.