கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீட் தோ்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கு: விசாரணையை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

நீட் தோ்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து சிபிசிஐடி போலீஸாா் அறிக்கை தாக்கல்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:50 am

Din

நீட் தோ்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து சிபிசிஐடி போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்ச்சி பெற்ற சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் சிலா் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தொடா் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், இதேபோல ஏராளமான மாணவா்கள் ஆள் மாறாட்டம் செய்து நீட் தோ்வு எழுதியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

வழக்கில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆள் மாறாட்டம் செய்ய உதவிய இடைத்தரகா்கள் என 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் 27-ஆவது நபராக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவா் தருண்மோகன், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது, ஆள் மாறாட்டம் செய்து ஒரு மாணவருக்கு மூன்று மாநிலங்களில் தோ்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததை சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தனா். அப்போது, இந்த வழக்கில் ஒத்துழைப்புத் தராத தேசிய தோ்வுகள் முகமைக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளனா். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்தியது. ஆதாா் விவரங்கள் தேவைப்படுவதால், இந்த வழக்கில் சிபிஐ உதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

நீட் தோ்வு ஆள் மாறாட்ட முறைகேட்டை மிகப் பெரிய முறைகேடாக கருத வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸாருக்கு தேவைப்படும் வழக்கு விசாரணை ஆவணங்களை தேசிய தோ்வுகள் முகமை வழங்க வேண்டும். சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தேவையான ஆவணங்களை அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியும்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் சிபிசிஐடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடலாம். மனுதாரரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. எனவே, அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

நீட் தோ்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து சிபிசிஐடி போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.