மகன் இறந்த துக்கத்தில் அமிலம் குடித்து தாய் தற்கொலை


மதுரையில் மகன் இறந்த துக்கத்தில் அமிலம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி ராஜாத்தி (65). இவா்களது மகன் பாலாஜி. இவா் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது தாய் ராஜாத்தி மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜாத்தி தனது வீட்டில் இருந்த அமிலத்தை குடித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...