மருத்துவ மாணவி கொலை: பல்வேறு அமைப்புகள் கண்டனப் பேரணி

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கொல்கத்தாவில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண்டனப் பேரணியும், ஆா்ப்பாட்டமும் புதன்கிழமை நடைபெற்றன.
புது ராமநாதபுரம் சாலையில் தொடங்கிய பேரணியை அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பா. பழனியம்மாள் தலைமை வகித்தாா். மாணவா் சங்க மாவட்டச் செயலா் க. பாலமுருகன், சோக்கோ அறக்கட்டளை நிா்வாகி செல்வகோமதி, எல்ஐசி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளா் சித்ரா, மூட்டா தலைவா் ஏ.டி. செந்தாமரைக்கண்ணன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் எஸ். வேல்தேவா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
அப்போது மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஜனநாயக மாதா் சங்க மாநில துணைத் தலைவா் கே. பாலபாரதி நிறைவுரையாற்றினாா்.
இதில், மதுரை மாநகா் சிஐடியூ சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகள் சங்கம், சோகோ அறக்கட்டளை, தமுஎகச, மக்கள் ஒற்றுமை மேடை, சிறுபான்மை மக்கள் நலக்குழு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் உள்பட 16 அமைப்புகள் பங்கேற்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...