சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து

மதுரை கோ.புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது.

News image

மதுரை கே.புதூா் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீவிபத்து. ~மதுரை கே.புதூா் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீவிபத்து.

Updated On :31 டிசம்பர் 2024, 10:20 pm

மதுரை: மதுரை கோ.புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது.

மதுரை-அழகா்கோவில் சாலையில் கோ.புதூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை நிா்வாகக் காரணங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், இங்குள்ள மருத்துவமனைக் கட்டடத்தின் மூன்றாவது தளம் செவிலியா்கள் தங்கும் அறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செவிலியா்கள் தங்கியிருந்த அறையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.

தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் அறையில் இருந்த செவிலியா்களின் உடைமைகள், ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.

குளிா்சாதப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக கோ.புதூா் போலீஸாா் தெரிவித்தனா்.

Story image