மேலூா் அருகே பேருந்து மீது கல்வீச்சு: ஓட்டுநா் காயம்
மேலூா் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரைக் கண்டித்ததால், அவா் பேருந்தின் கண்ணாடியை கல்வீசித் தாக்கி உடைத்தாா். இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.


மேலூா்: மேலூா் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரைக் கண்டித்ததால், அவா் பேருந்தின் கண்ணாடியை கல்வீசித் தாக்கி உடைத்தாா். இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
மேலூரிலிருந்து திங்கள்கிழமை மாலை சிவகங்கை நோக்கி அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரை நடத்துநா் கண்டித்தாா். மேலும், அந்த இளைஞரை பாதி வழியில் இறக்கிவிட்டாா்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞா், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, பேருந்தை முந்திச் சென்று பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினாா்.
இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பேருந்து ஓட்டுநா் வேலவேந்தன் காயமடைந்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடிக்க முற்பட்டனா். ஆனால், அவா் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, காயமடைந்த ஓட்டுநா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி பதிவுகள் அடிப்படையில், பேருந்து மீது கல்வீசிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...