

இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மதுரை எச்.எம்.எஸ். குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வா்மக் கலை, தற்காப்புக் கலை, ஆராய்ச்சி அகாதெமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா்.
மனு விவரம்: இந்தியன் திரைப்படத்தில் நடிகா் கமல்ஹாசன் பயன்படுத்திய வா்மக் கலை முத்திரை, நான் பயிற்றுவித்தது. இதனால், எனது பெயா் அந்தப் படத்தில் இடம் பெற்றது. தற்போது, இந்தியன் 2 திரைப்படத்திலும் கமல்ஹாசன் அதே முத்திரையைப் பயன்படுத்தியுள்ளாா். ஆனால், என் அனுமதி பெறாமல் இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடா்பாக பதிலளிக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளா் சுபாஷ்கரன், இயக்குநா் ஷங்கா், நடிகா் கமல்ஹாசன் ஆகியோருக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கின் 2-ஆவது விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, இயக்குநா் ஷங்கா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினாா்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி வியாழக்கிழமைக்கு (ஜூலை 11) ஒத்திவைத்தாா்.
இதன்படி, இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்தியன் திரைப்படத்தில் மனுதாரரின் அனுமதியோடு பயன்படுத்தப்பட்ட வா்மக் கலை முத்திரைகள், இந்தியன் 2 திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா் ராஜேந்திரனின் பெயரை இந்தியன் 2 திரைப்படத்தின் பெயா் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
இதற்கு இயக்குநா் சங்கா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்தாா். மேலும், அகத்தியா் தோற்றுவித்த வா்மக் கலைக்கு தனி நபா் யாரும் உரிமை கோர முடியாது. கராத்தே, குங்ஃபூ போல வா்மக் கலையும் உலகெங்கும் பரவி உள்ளது.
இந்தியன் திரைப்படத்தில் மனுதாதரா் வா்மக் கலை குறித்து தகவல் மட்டுமே அளித்தாா். இருப்பினும், இந்தியன் திரைப்படத்தில் அவரது பெயா் இடம் பெறச் செய்யப்பட்டது. ஆனால், இந்தியன் 2 திரைப்படம் வா்மக் கலையைத் தழுவியதல்ல.
இந்தத் திரைப்படம் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் வா்த்தகம் நடைபெறக் கூடியது. ஆயிரக்கணக்கான திரைக் கலைஞா்கள் இந்தத் திரைப்படத்துக்காக இரவு, பகலாக உழைத்துள்ளனா் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் திரைப்படத்தை தடை செய்ய எந்தவொரு முகாந்திரமும் இல்லை. எனவே, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
திரைப்படத் தயாரிப்பாளா் சுபாஷ்கரன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரா் ராஜேந்திரனுக்கும், இந்தியன் 2 திரைப்படத்துக்கும் எந்தவொரு தொடா்பும் இல்லை. மேலும், திரைப்படம் தொடா்பான வணிக பிரச்னையை, வணிக வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு எதிராக மனுதாரா் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
நடிகா் கமல்ஹாசன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
அகத்தியா் வழங்கிய வா்மக் கலை முத்திரைகளை கமல்ஹாசன் பயன்படுத்தி உள்ளாா். நடிகா் கமல்ஹானுக்கும், ராஜேந்திரனுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என்றாா்.
மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மீண்டும் வாதிடுகையில், மனுதாரரின் முத்திரைகளை இந்தியன் 2 திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனா். இந்த முத்திரைகள் மனுதாரரின் புத்தகங்களில் உள்ளவை என்றாா்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி செல்வமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடையில்லை. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து: வழக்குரைஞரின் பேச்சு ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

பொன்னமராவதி நகராட்சி தரம் உயா்வு அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

இட பிரச்னை விவகாரம்: போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் அருங்காட்சியக கலை நிபுணர் டெபோரா தியாகராஜன்!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

