காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கருணை அடிப்படையில் குரூப்-சி பணி நியமனத்துக்கு எதிராக மதுரையில் ஆா்ப்பாட்டம்

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :26 ஜூன் 2024, 12:35 am

Din

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருணை அடிப்படையில் குரூப்- சி பணி நியமனத்தைத் தடை செய்யும் அரசின் மறைமுக நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஒட்டுமொத்த பணியிடங்களில் 5 சதவீதம் மட்டுமே குரூப்- சி பணியிடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உச்சவரம்பை நீக்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.சின்னப்பொண்ணு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.மணிகண்டன், சத்துணவு ஊழியா்கள் சங்க மாநிலச் செயலா் நூா்ஜஹான் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளா் கே.முனியசாமி, டான்சாக் மாநிலச் செயற்குழு உறுப்பினா் பா.மனோகரன், அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலா்கள் சங்க மண்டலத் தலைவா் வீ.வீரவேல்பாண்டியன், சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கலைச்செல்வி, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு ஊழியா் சங்க நிா்வாகி ரா.மாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சோ.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சோ.கல்யாணசுந்தரம் நன்றி கூறினாா்.