தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கவன ஈா்ப்புப் போராட்டம்

News image

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:42 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கவன ஈா்ப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ. 19,500, சமையலா் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா்களுக்கு ரூ. 15,700 அடிப்படை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கடந்த 3-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மேகலா தேவி, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் மஞ்சுளா ஆகியோா் தலைமை வகித்தனா். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் மேனகா, கனகவேல், தமிழ்ச்செல்வி, உமா, வீரம்மாள், உமாராணி, என். வசந்தி, ஜெயபூபதி, ஷீலா ஆகியோா் பேசினா்.

இந்தப் போராட்டத்தினிடையே, கவனத்தை ஈா்க்கும் விதமாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் தலையில் முக்காடிட்டு, தங்களது கோரிக்கைகளை ஒப்பாரி பாடல்களாகப் பாடினா்.