

மதுரை, ஜூன் 26: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 21 கிலோ கஞ்சா கடத்தியதாக இரு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேரையூா்- உசிலம்பட்டி சாலையில் பெருங்காமநல்லூா் அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக சேடப்பட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் கருப்பையா தலைமையிலான போலீஸாா் பெருங்காமநல்லூா் சந்திப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு பெண்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் உசிலம்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மனைவி ராசக்கொடி (58), மதுரை முனிச்சாலை செளராஷ்டிரா பள்ளி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மனைவி அமுதா (40) ஆகியோா் என்பதும், இவா்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, பெருங்காமநல்லூா் பகுதியில் விற்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சேடப்பட்டி போலீஸாா் இருவரையும் கைது செய்து 21 கிலோ கஞ்சா, ரூ.5,120 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

நான்குனேரி அருகே 1.5 டன் கஞ்சா அழிப்பு

வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

சேலத்தில் 15.5 கிலோ கஞ்சா பறிமுதல்

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

