புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கைதியிடம் லஞ்சம்: சிறைக்காவலா் பணியிடை நீக்கம்

மதுரையில் கைதியிடம் லஞ்சம் பெற்ற சிறைக்காவலா் பணியிடை நீக்கம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:53 am

Din

மதுரை: மதுரையில் கைதியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக சிறைக்காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனா்.

இந்த நிலையில், சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறைக் காவலா்கள் லஞ்சம் பெறுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, சிறைத் துறையினா் நடத்திய விசாரணையில், செல்வகுமாா் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பா் மூலமாக சிறைக் காவலா் முகமது ஆசிப் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து, சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் உத்தரவிட்டாா்.