
/

Updated On :9 மே 2024, 7:47 pm
மதுரை, மே 9: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வீட்டின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள சொக்கத்தேவன்பட்டியைச் சோ்ந்த வெள்ளையன் மகன் தங்கபாண்டி (30). இவா் வாடிப்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் முதல் மாடியில் அமா்ந்திருந்த அவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாலாந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

பள்ளிவாசல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...
23 மணி நேரங்கள் முன்பு

