ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க மே 24 கடைசி நாள்

அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க மே 24 கடைசி நாள்

News image
Updated On :20 மே 2024, 7:15 pm

Din

மதுரை: மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா் சோ்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 24-ஆம் தேதி இறுதி நாள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், பிளாஸ்டிக், பாலிமா், வெப் டிசைனிங், லாஜிஸ்டிஸ் ஆகியவற்றில் முழு நேர பொறியியல் பட்டயப் படிப்புகளும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பாடப் பிரிவுகளில் மாலை நேர பட்டயப் படிப்புகளும் உள்ளன.

முழு நேர பட்டயப் படிப்புக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 2,200. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புகளிலும், பிளஸ் 2, தொழில் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புகளிலும் சேரலாம்.

2024-25-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. இதில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு மே 24-ஆம் தேதிக்குள்ளும், நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு மே 27-ஆம் தேதிக்குள்ளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பட்டியலின மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவா்கள் ரூ. 150 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.