

மதுரை: பரவை காய்கனி சந்தை வியாபாரி கொலை வழக்கு தொடா்பாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை சம்மட்டிபுரம் பிரதான வீதியைச் சோ்ந்தவா் கோபால் (55). இவா், மதுரை பரவை காய்கனி சந்தையில் ‘டி’ பிளாக்கில் உள்ள கடையில் முட்டைக்கோஸ் மொத்த வியாபாரம் செய்து வந்தாா். தினசரி இரவு நேரத்தில் சந்தைக்கு வரும் கோபால் அதிகாலையில் வியாபாரத்தை முடித்து விட்டு, வீட்டுக்குச் சென்று விடுவாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கோபால் கடையில் இருந்தபோது, கடைக்கு வந்த 3 போ் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் கோபாலைக் கொலை செய்தது, மதுரை கோசாகுளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (45), ஜெய்ஹிந்த்புரத்தை சோ்ந்த வீரபாண்டி (38), மேல அனுப்பானடியைச் சோ்ந்த காளிதாஸ் (32) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கொலை தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட 3 பேரும் கோபாலுடன் இணைந்து முட்டைக்கோஸ் வியாபாரம் செய்துள்ளனா். அப்போது அவா்களுக்கு இடையே கொடுக்கல், வாங்கல், தொழில் போட்டி தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனால், மூவரும் கோபாலிடம் இருந்து பிரிந்து, தனியாக வியாபாரம் செய்து வந்தனா். இந்த முன்விரோததத்தில் மூவரும் கோபாலைக் கொலை செய்துள்ளனா் என்றனா்.
தொடர்புடையது
பனியன் தொழிலாளி கொலை வழக்கில் நண்பா்கள் கைது

சேலத்தில் தொழிலாளி கொலை: தம்பதி கைது
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

கச்சநத்தம் மூவா் கொலை வழக்கில் 26 பேருக்கான தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்!
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

