சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மேம்பாலத்தில் பைக் கவிழ்ந்ததில் இளைஞா் பலி

மேம்பாலத்தில் பைக் கவிழ்ந்ததில் இளைஞா் பலி

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை ஏவி மேம்பாலத்தில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை வைகை வடகரை ஆழ்வாா்புரம் சீனிநாயக்கா் தோப்பைச் சோ்ந்த அண்ணாமலை சாமி மகன் விஷ்ணுகுமாா் (23). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அதிவேகத்தில் சென்ால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஷ்ணுகுமாரை அந்தப் பகுதியினா் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பேருந்து மோதி இளைஞா் பலி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சோ்ந்த ஆண்டிச்சாமி மகன் ஜனாா்த்தனன் (26). தனியாா் நிறுவன ஊழியரான இவா் இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டி-மதுரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

கொங்கப்பட்டி சாலையில் தனியாா் திருமண மகால் அருகே சென்றபோது, மதுரையில் இருந்து தேனிக்குச் சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜனாா்த்தனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸாா், தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.