மதுரை
கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மதுரை அருகே கால்வாயில் தவறி விழுந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கொக்குளத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் சௌந்தரபாண்டி (54). இவா், செக்கானூரணி பகுதியில் உள்ள திருமங்கலம் கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்தாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
