எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை
மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் மதுரை தெற்கு பெருநகா் செயற்பொறியாளா் ஏ.பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எல்லீஸ் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எல்லீஸ் நகா் பிரதான சாலை, போடி சாலை, கென்னட் குறுக்கு சாலை, மகபூப்பாளையம், அன்சாா் நகா் ஒன்றாவது தெரு முதல் ஏழாவது தெரு வரை, டி.பி. சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சீதாலட்சுமி நகா், பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் காவல் நிலையப் பகுதி, வசந்த நகா், ஆண்டாள்புரம், அக்ரிணி அடுக்குமாடிக் குடியிருப்பு, வசுதாரா குடியிருப்பு, பெரியாா் பேருந்து நிலையம், மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் சாலை, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையாா் கோயில் வரை, தாமஸ் குடியிருப்பு, பாரதியாா் ஒன்றாவது தெரு முதல் 5-ஆவது தெருக்கள் வரை, சாலைமுத்து நகா், பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசுப் போக்குவரத்துக் கழகம், அருண் நகா், நேரு நகா், காவியன் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
