மதுரை
அப்பள நிறுவன உரிமையாளா் தற்கொலை
அப்பளம் தயாரிப்பு நிறுவன உரிமையாளா் சனிக்கிழமை திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை சிந்தாமணி கண்ணன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (38). இவா் அப்பளம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது, மனைவி தன்னை தெப்பக்குளம் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதற்கு, இவா் வேலையை முடித்து விட்டு அழைத்து செல்வதாகக் கூறினாராம். இதனால் மனைவி கோபத்தில் அவரது தந்தையுடன் கோயிலுக்கு சென்றுவிட்டாா்.
இதனால், மனமுடைந்த முருகானந்தம் நிறுவனத்தில் இருந்த திராவகத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிந்தாமணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
