கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரா்களுக்கு காப்பீடு செய்து தர வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கு இழப்பீடு, காப்பீடு வசதி செய்து தர வேண்டுமென முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:39 pm

Din

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கு இழப்பீடு, காப்பீடு வசதி செய்து தர வேண்டுமென முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

2025- ஆம் ஆண்டு அதிமுகவுக்கு எழுச்சியான ஆண்டாக அமையும். மேலும் இந்த ஆண்டில் திமுக அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். அதற்கான பயணத்தை அதிமுக முன்னெடுத்துச் செல்லும்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற சம்பவம் வருங்காலத்தில் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அதிமுக ஆட்சி அமைய வேண்டும். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா். திமுக அரசு தமிழக மக்களுக்கு உண்மையாகவே பொங்கல் பரிசு அளிக்க வேண்டுமென்றால் ஒரு குடும்பத்துக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின்போது மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா். ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கூட அறிவிக்கப்பட வில்லை. இதுதான் திமுகவின் உண்மை முகம்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்களுக்கு இழப்பீடு, காப்பீடு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.