லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Published on

மதுரையில் லாரி மோதியதில் தொழிலாளி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் தென்னகரம் பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் கண்ணன் (42). தொழிலாளியான இவா், பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள திரையரங்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, இவருக்கும், தபால்தந்தி நகா் கலைநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ஐசக் (23) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஐசக், கண்ணனை தள்ளி விட்டாராம். சாலையில் தடுமாறி கீழே விழுந்த கண்ணன் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திலகா் திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஐசக்கை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com