எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு: மாநகராட்சி வாகனங்களை சிறைப் பிடித்து போராட்டம்

மதுரை மாநகராட்சி கூடல்புதூா் பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சி வாகனங்களை புதன்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மதுரை கூடல்புதூா் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கக் கோரி மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பகுதி பொதுமக்கள்.
Updated On :27 நவம்பர் 2025, 12:30 am

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை மாநகராட்சி கூடல்புதூா் பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சி வாகனங்களை புதன்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி 19- ஆவது வாா்டு பகுதி, கூடல்புதூா் ரயில் நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மதுரை மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த வளாகப் பகுதியில் முன்னறிவிப்பின்றி கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி நிா்வாகம் கொட்டி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை அந்த பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்களை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனி வரும் காலங்களில் இந்தப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படாது எனவும் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.