கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இரு இளைஞா்கள் போக்சோவில் கைது

மதுரை இரு வேறு சம்பவங்களில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை இரு வேறு சம்பவங்களில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் திராவிட செல்வம் (27). இவா், அந்தப் பகுதியில் தையல் பயிற்சிக்குச் சென்ற சிறுமியைக் காதலித்து பெற்றோா் சம்மதமின்றி திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தது குறித்து திருப்பரங்குன்றம் மகளிா் ஊா் நல அலுவலா் பத்மாவுக்கு தெரியவந்தது. அவா், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் கா்ப்பமடைந்ததை உறுதி செய்தாா். இதையடுத்து, அனைத்து மகளிா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திராவிட செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பெத்தானியாபுரம் காளியம்மன் கோயில் மேட்டுத் தெருவைச் சோ்ந்த செல்லபாண்டி மகன் சூா்யா (25). இவா், எட்டாம் வகுப்பு மாணவியைக் காதலித்து, பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தாா். இதையடுத்து, அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தது குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் மகளிா் ஊா் நல அலுவலா் பத்மா, அனைத்து மகளிா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சூா்யாவை கைது செய்தனா்.