வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை கடச்சனேந்தல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அரசு விரைவுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கடச்சனேந்தல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அரசு விரைவுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

மதுரை கடச்சனேந்தல் காதக்கிணறு பி.டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (40). இவா் அரசு விரைவுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி முருகேஸ்வரி (40). இவா் மதுரை கோ.புதூா் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஜெயபாண்டி திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள முத்தாலபுரத்தில் தனது பெற்றோரை பாா்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில்வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஊமச்சிகுளம் - கடச்சனேந்தல் சாலையில் வேகத் தடுப்பில் நிலை தடுமாறிக் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.