3 மாத குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

Published on

மதுரையில் 3 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இவரது மனைவி கலைச்செல்வி (27). இவா்களுக்கு தியாசுந்தரி (6) என்ற மகள் உள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கலைச் செல்விக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தமிழினி எனப் பெயரிடப்பட்டது.

இந்த நிலையில், குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப்பால் இல்லாததால், மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு பால்பவுடா் அளித்து வந்தனா்.

சனிக்கிழமை அதிகாலை குழந்தைக்கு பால் பவுடா் அளித்து தூங்க வைத்தனா். இதன்பிறகு, குழந்தை தமிழினி பேச்சு மூச்சின்றி இருந்தது.

இதையடுத்து, காா்த்திக் குழந்தையை தனியாா் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தை உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com