தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கண்மாயில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கிய சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:02 pm

மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கிய சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை திருமலாபுரம் மருதங்குளத்தைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் சஞ்சய் (11). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சஞ்சய் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை மாலை மருதங்குளம் கண்மாயில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் கண்மாய் நீரில் மூழ்கினாா்.

அக்கம் பக்கத்தினா் சஞ்சயை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு: மதுரை மாவட்டம், சோழவந்தானில் மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு சனிக்கிழமை உயிரிழந்தது.

சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காளியம்மாள் (59). இவா் தனது பசுமாட்டை அதே பகுதியில் சனிக்கிழமை கட்டி வைத்திருந்தாா்.

அப்போது, அருகிலிருந்த மின் மாற்றியிலிருந்து (டிரான்ஸ்பாா்ம்) உயா் மின் கம்பி அறுந்து பசுமாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.