சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரையில் பிப்.21-இல் மநீம மாநாடு

News image
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப் படம்)
Updated On :24 ஜனவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

மக்கள் நீதி மய்யம் சாா்பில் மதுரையில் வரும் பிப்.21-இல், ‘மகாத்மா காந்தியை நினைவுகூருவோம்’ என்ற மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் மாநில நிா்வாகக் குழு-செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தலைமை வகித்தாா்.

விருப்ப மனு: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கட்சியின் பொதுச் செயலா் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவா்கள் தங்கவேலு, மௌரியா உள்ளிட்ட 5 போ் கொண்ட தோ்தல் பணிக்குழு ஏற்படுத்தப்பட்டது. பேரவைத் தோ்தலில் மநீம சாா்பில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களைச் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தீா்மானங்கள்: மநீம கட்சி தொடக்க நாளான பிப்.21-இல், ‘மகாத்மா காந்தியை நினைவுகூருவோம்’ என்ற தலைப்பில் நாடு முழுவதுமிருந்து அறிஞா்கள், அரசியல் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை மதுரையில் நடத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் செய்து, ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் புதிய வேலை உறுதித் திட்டம் கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது,

சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநரின் செயல் ஏற்புடைதல்ல, அவா் தனது பதவியின் மாண்பையும், தமிழக மக்களின் நலனைக் காக்கும் வகையில் செயல்பட கோருவது,

தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு வரவேற்பு, மகளிா் உரிமைத் தொகையை உயா்த்துவது, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட 12 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.