மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் ஒரு பெண்ணுக்கு ஊட்டச் சத்துப் பெட்டகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன். உடன் மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

Published on

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், சனிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தாா். பிறகு, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் அவா் வழங்கினாா்.

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஸ், சுகாதாரத் துறை இணை இயக்குநா் செல்வராஜ், துணை இயக்குநா் பொற்செல்வன், மாநகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் பாா்த்திபன், மாமன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி பாண்டியன், தமிழ்ச்செல்வி மாயழகு, பானு முபாரக் மந்திரி, முத்துமாரி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொது, பெண்கள் நலன், எலும்பியல், குழந்தைகள் நலன், கண், இருதயம், நரம்பியல், தோல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து, ஆலோசனைகளை வழங்கினா். 1,000-க்கும் அதிகமானோா் இந்த முகாமில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com