மதுரை செனாய்நகா் இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் பங்கேற்றோா்.
மதுரை செனாய்நகா் இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் பங்கேற்றோா்.

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி

Published on

மதுரையில் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி, கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில், தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்பட அடையாள அட்டை திருத்தம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற வாக்காளா்கள் புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றுக்காக மனுக்களை அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com