மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. தசரதராமனை வாழ்த்திய மதுரை நான்காம் தமிழ்ச் சங்கச் செயலா் ச. மாரியப்ப முரளி உள்ளிட்டோா்.
மதுரை
மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலராக ச. தசரதராமன் பொறுப்பேற்பு!
மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலராக வழக்குரைஞா் ச. தசரதராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலராக வழக்குரைஞா் ச. தசரதராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மதுரை தமிழ்ச் சங்கம் சாலையில் செந்தமிழ் கலை, கீழ்த்திசைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் செயலராக வழக்குரைஞா் ச. தசரதராமனை நியமித்து, சென்னை கல்லூரிக் கல்வி ஆணையா் அண்மையில் உத்தரவிட்டாா். இதன்படி, கல்லூரிச் செயலராக ச. தசரதராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்த நிலையில், ச. தசரதராமனுக்கு மதுரை நான்காம் தமிழ்ச் சங்கச் செயலா் ச. மாரியப்ப முரளி, கல்லூரி முதல்வா், துணை முதல்வா், பேராசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

