/

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்!

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 12:00 am IST

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.

மதுரை செல்லூரில் உள்ள மாநகராட்சி வாகனப் பணிமனையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்கான குப்பை அள்ளும் வாகனங்கள், லாரிகள், மண்கூட்டும் வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள், மினி ரோபோட், கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் ஆகியவை பராமரிக்கப்படுகின்றன.

இந்தப் பணிமனையில் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, நேதாஜி சாலையில் உள்ள ஜான்சி ராணி பூங்கா பகுதியில் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், காளவாசல் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, உதவிச் செயற்பொறியாளா் மயிலேறிநாதன், இந்திரா தேவி, உதவிப் பொறியாளா்கள் அமா் தீப், சுகாதார அலுவலா் வீரணன், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.