சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.

News image

மதுரை அனுப்பானடி பகுதியில் குப்பைகள் சேகரமாகும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.

Updated On :19 ஜூன் 2026, 1:24 am IST

பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி அனுப்பானடி ராஜீவ்காந்தி தெருக்கள், குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள், குடிநீா் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அனுப்பானடி பன்னீா்செல்வம் தெருவில் வசித்து வரும் பொதுமக்களிடம் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். வீடுகளுக்கு குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதேபோல, ஒவ்வொரு வாா்டுகளிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து அறிவிப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆணையா் கௌரவ் குமாா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா் மணிமாறன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், சுகாதார அலுவலா் வீரன், மாநகராட்சி பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.