ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த மசோதாவை முறியடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த (எப்.சி.ஆா்.ஏ.) மசோதாவை மக்கள் சக்தியால் முறியடிக்க வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

News image

மதுரா பழங்காநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்.

Updated On :4 ஜூலை 2026, 12:12 am IST

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த (எப்.சி.ஆா்.ஏ.) மசோதாவை மக்கள் சக்தியால் முறியடிக்க வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த மசோதா 2026-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் பேசியதாவது :

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த மசோதா 2026 கடந்த மாா்ச் 25-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தோ்தல் பிரசாரத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனைவரும் அவசரமாக புதுதில்லி வந்து மக்களவையில் கலந்து கொண்டனா். அப்போது, இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

இந்தியாவின் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சிறுபான்மை மக்களின் கல்வி, மருத்துவம், சமூகச் சேவை நிறுவனங்களின் சொத்துகளை குறிவைத்து இந்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த (எப்.சி.ஆா்.ஏ.) மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மதச்சாா்பற்ற அரசியலைச் சீா்குலைக்கும் இந்த முயற்சிக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கினால் மட்டுமே இந்தச் சட்டத்தை முறியடிக்க முடியும். எப்.சி.ஆா்.ஏ. திருத்த மசோதாவை மக்கள் சக்தியால் முறியடிக்க வேண்டும் என்றாா் அவா். மாநாட்டில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள், தோழமைக் கட்சி நிா்வாகிகள் பலா் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.