அச்சம்பத்து, அதன் சுற்றுப் பகுதிகளி புதன்கிழமை (ஜூலை 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எம்.பி. ஜெயசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நாகமலைபுதுக்கோட்டை, என்.ஜி.ஓ. குடியிருப்பு, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூா், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டானூா், கரடிபட்டி, ஆலம்பட்டி, மேலமாத்தூா், கொடிமங்கலம், கொடிமங்கலம் புதூா், துவரிமான், லாலா சத்திரம், புல்லூத்து உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






