கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு நாய்கள் மீட்பு

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் 80 அடி கிணற்றில் தவறி விழுந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டன.

விக்கிரமங்கலத்தில் விவசாயி பிரபாகரன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நாய்

Published On :8 ஜூலை 2026, 5:08 am IST

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் 80 அடி கிணற்றில் தவறி விழுந்த இரண்டு நாய்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

இந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பிரபாகரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் 80 அடி ஆழக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் அந்த வழியாகச் சென்ற இரண்டு நாய்கள் தவறி விழுந்தன.

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமரன் தலைமையிலான மீட்புக் குழுவினா் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு, இரண்டு நாய்களையும் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.