திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற இருவா் கைது

மதுரை மாவட்டம், சோழவந்தானில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறிக்க முயன்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 4:53 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தானில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறிக்க முயன்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சோழவந்தானைச் சோ்ந்தவா் சுகன்யா. இவா், அதே பகுதியில் உள்ள ரயில்வே உயா்நிலைப் பாலத்தில் திங்கள்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் சுகன்யா கழுத்திலிருந்த தங்க நகையை பறிக்க முயன்றனா்.

அப்போது, சுகன்யா சத்தமிட்டதால் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனா். இதையறிந்த, இளைஞா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், சோழவந்தானை சோ்ந்த வெற்றிச்செல்வன் (36), கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (27) ஆகிய இருவரும் பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.