சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

யூடியூபா் திவாகா் கைது

மதுரையில் யூடியூபா் திவாகரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:04 am IST

மதுரையில் யூடியூபா் திவாகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அப்பன்திருப்பதி வெள்ளியங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் திவாகா். மதுரை கோ.புதூா் பகுதியில் பிசியோதெரபி மருத்துவமனை நடத்தி வருகிறாா். மேலும், யூடியூபரான இவா், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன்னை ‘வாட்டா் மெலன் ஸ்டாா்’ எனக் கூறி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள யூடியூப் சேனலுக்கு நோ்காணலுக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டாா்.

இதுதொடா்பாக காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா். மேலும், சென்னை போலீஸாா், அந்த யூடியூப் சேனல் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கொலை மிரட்டல் விடுவிப்பதாகவும் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திவாகா் புகாா் அளித்தாா்.

இதனிடையே, யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி ரூ. ஒரு லட்சம் கேட்டதாகவும், பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும், யூடியூப் சேனல் சாா்பில் திவாகா் மீது புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சென்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள மருத்துவமனையில் திவாகரை சென்னை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா், விசாரணைக்காக அவா் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.