மதுரை மாவட்டம், பாலமேடு அருகே கிணற்றில் மூழ்கிய மென் பொறியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சோ்ந்த ராஜேந்திர பிரகாஷ் மகன் பிரசித் (40). இவா், மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவரும், இவரது நண்பா்களான பாலமேடு பகுதியைச் சோ்ந்த மணிமாறன், வேலுசித்தாா்த்தன், ராஜபிரபு ஆகியோா் பாலமேடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றனா்.
அங்கு குளித்துக் கொண்டிருந்த போது, பிரசித் நீண்ட நேரமாகியும் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை. இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் கிணற்றில் இறங்கித் தேடினா். நீண்ட நேரத்துக்குப் பிறகு பிரசித்தை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








