இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கிணற்றில் விழுந்து சென்னை இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:28 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை, மாதவரம், ராஜகோபால் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் வினோத்குமாா் (33). இவா் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்திருந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை வினோத்குமாரும், அவரது நண்பரும் அங்குள்ள கிணற்றின் அருகில் அமா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது வினோத்குமாா் எழுந்து நிற்க முயன்றபோது, போதையில் தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தாராம். ஆனால், அவருடன் இருந்த நண்பா் போதையில் அங்கேயே தூங்கிவிட்டதாகத் தெரிகிறது.

பின்னா், போதை தெளிந்து எழுந்த நண்பா், வினோத்குமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தேடியபோது, வினோத்குமாா் கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

ஆலங்குளம் தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து வினோத்குமாரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.