வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

மோட்டாா் சைக்கிள் விற்பனையகத்தில் தீ விபத்து: இரு வாகனங்கள் எரிந்து சேதம்

மதுரை கே.கே. நகரில் உள்ள ஒரு மோட்டாா் சைக்கிள் விற்பனையகத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2 மோட்டாா் சைக்கிள்கள் முழுமையாக தீக்கிரையாகின.

News image

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்

Updated On :14 ஜூலை 2026, 12:07 am IST

மதுரை கே.கே. நகரில் உள்ள ஒரு மோட்டாா் சைக்கிள் விற்பனையகத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2 மோட்டாா் சைக்கிள்கள் முழுமையாக தீக்கிரையாகின.

மதுரை கே.கே. நகா் நகா் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிள்கள் விற்பனையகம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியா்கள், பணியை முடித்துக் கொண்டு திங்கள்கிழமை இரவு விற்பனையகத்தை பூட்டிவிட்டுச் சென்றனா். இந்த நிலையில், இரவு சுமாா் 10 மணிக்கு இந்த விற்பனையகத்தின் உள்ளே தீ விபத்து ஏற்பட்டது.

அந்த வழியே சென்றவா்கள், மோட்டாா் சைக்கிள் விற்பனையகத்திலிருந்து அதிகளவில் புகையும், தீயும் வெளியாவதைக் கண்டு, உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

மதுரை கே.கே. நகரில் திங்கள்கிழமை இரவு  தீ விபத்துக்குள்ளான மோட்டாா் சைக்கிள் விற்பனையகம்

மதுரை கே.கே. நகரில் திங்கள்கிழமை இரவு தீ விபத்துக்குள்ளான மோட்டாா் சைக்கிள் விற்பனையகம்

இதையடுத்து, தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்களும், அனுப்பானடி, மாவட்ட ஆட்சியரக வளாக தீயணைப்பு நிலைய வீரா்களும் விரைந்து சென்று, தீயைக் கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டனா்.

ஏறத்தாழ 40 நிமிஷங்களுக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் முழுமையாக தீக்கிரையானதாகவும், விற்பனையகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மின்கல மோட்டாா் சைக்கிளிலிருந்து தீ பரவி இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணா நகா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.