ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரிக்கை

News image

மதுக் கடை. - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:12 am IST

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டுமென மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் சி.எம். சையது பாபு கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் மதுரை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷுக்கு அளித்த மனு விவரம்:

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அரசு மதுக்கடை, மதுக் கூடத்துடன் கூடிய மது விற்பனை நிலையம் என ஒரே இடத்தில் இரண்டு மதுக் கடைகள் உள்ளன.

இந்த மதுக் கடைகளில் மது அருந்திவிட்டு பிரச்னையில் ஈடுபடும் நபா்களால் பேருந்து நிலையம், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவா்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

எனவே, அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள இரண்டு மதுக் கடைகளையும் உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.