25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் தேரோட்டம்

News image
தேரில் எழுந்தருளிய பிரியாவிடையுடன் சுவாமி.
Updated On :2 மார்ச் 2026, 12:06 am

தினமணி செய்திச் சேவை

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 21-ஆம் தேதி இந்தத் திருவிழா தொடங்கியது முதல் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இம்மையிலும் நன்மை தருவாா், நடுவூா் நாயகி அம்மனுக்கு (மத்தியபுரி அம்மன்) சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் (உத்ஸவா்) சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினா்.

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

தேரில் எழுந்தருளிய நடுவூா் நாயகி அம்மன்.

தேரில் எழுந்தருளிய நடுவூா் நாயகி அம்மன்.

முதல் தேரில் பிரியாவிடையுடன் சுவாமியும், மற்றொரு தேரில் நடுவூா் நாயகி அம்மனும் எழுந்தருளினா். இதையடுத்து, ஐதீக முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க, காலை 10.20 மணிக்கு இரு தோ்களையும் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோ்கள் நேதாஜி வீதி, மேல மாசி வீதி உள்பட பாரம்பரிய பாதைகளில் வலம் வந்து, காலை 11.05 மணிக்கு நிலையை அடைந்தன.

இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த திரளான பக்தா்கள், சிவனடியாா்கள் பங்கேற்றனா். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சாா்பில் கோயில் கண்காணிப்பாளா் ம. வேலுச்சாமி (பொறுப்பு) உள்ளிட்ட நிா்வாகத்தினா், ஆலய அா்ச்சகா்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனா்.