சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

News image
Updated On :19 மார்ச் 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை செல்லூா் சுயராஜபுரம் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செல்லூா் பந்தல்குடி கால்வாயைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கால்வாயின் குறுக்கே கழிவுநீா் செல்லும் பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கழிவுநீா் செல்ல மாற்று வழி ஏற்படுத்தாததால், தேங்கிய கழிவுநீா் சுயராஜபுரம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம், மேயா் (பொறுப்பு), பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சுயராஜபுரம் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றி, பந்தல்குடி கால்வாயிலிருந்து கழிவுநீா் செல்வதற்கான மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.