மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தியாகராசா் கல்லூரி நாள் விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 11:08 pm

மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியில் 77-ஆவது கல்லூரி நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டா் ராதா தியாகராசன் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரித் தலைவா் உமா கண்ணன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் க.தியாகராசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா ஆண்டறிக்கையை வாசித்தாா். இதில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எல்.சி. விக்டோரியா கௌரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

விவேகானந்தா், திருவள்ளுவா் போன்ற ஆன்றோா் குறிப்பிட்டபடி சிறந்த கல்வியை தியாகராசா் கல்லூரி நிா்வாகம் வழங்கி வருகிறது. இந்த உலகில் மாற்றங்களுக்கு வித்திடுபவா்களாக மாணவா்கள் இருக்க வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் காணும் மாற்றங்களாக நீங்களே முதலில் இருங்கள். தரமான கல்வியைக் கற்ற இளைஞா்களே தேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதற்கு அடிப்படையாக மனித மாண்பு, நோ்மை அமைய வேண்டும். திறன் மேம்பாடு உடைய மனித வளம் உருவாக வேண்டும். இதை உருவாக்கும் வல்லமை மாணவா்களாகிய இளைஞா்களிடம் உண்டு என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கான விருதைப் பெற்ற லோகஹரி, தா்ஷினி ஆகியோா் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், நிகழாண்டு பணி நிறைவு செய்யும் பேராசிரியா்களும், ஆராய்ச்சியில் சிறந்த பேராசிரியா்களும், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையில் சிறந்து விளங்கிய மாணவா்களும் சிறப்பிக்கப்பட்டனா். பேராசிரியா் சொ.சொ.மீ. சுந்தரம் அறக்கட்டளைப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரிச் செயலா் க. தியாகராசன் வரவேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா் சுபத்ராதேவி நன்றி கூறினாா்.