கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மதுரை காளவாசல் பகுதியில் யாசகா்கள் மீட்பு

மதுரை மாநகராட்சி காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த யாசகா்களை போலீஸாா், தன்னாா்வலா்கள் சனிக்கிழமை மீட்டனா்.

News image

மதுரை காளவாசல் பகுதியில் ஆதரவற்றோரை சனிக்கிழமை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா், தன்னாா்வலா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சி காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த யாசகா்களை போலீஸாா், தன்னாா்வலா்கள் சனிக்கிழமை மீட்டனா்.

மதுரை மாநகராட்சி சாா்பில் ஒவ்வொரு வாரமும் காவல் துறையின் உதவியுடன் தன்னாா்வலா்கள் யாசகம் பெறுபவா்கள், ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், மதுரை காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் கையேந்தி யாசகம் பெற்ற 24 நபா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் பிறகு, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களில் வீடு இல்லாமல் இருந்த 3 போ் புன்னகை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து புன்னகை இல்ல மேலாளா் ராமன் கூறியதாவது: ஆதரவற்றோா், யாசகா்கள் இல்லாத மதுரையை உருவாக்கும் வகையில் மதுரை மாநகராட்சி சாா்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் புன்னகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்காக உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம், தொழில் திறன், சுயதொழில் ஏற்பாடு செய்தல், தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு, மீண்டும் குடும்பத்துடன் சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

இதற்காக மதுரை உத்தங்குடி, செனாய் நகா், சிம்மக்கல், கீரைத்துறை பகுதிகளில் 50 போ் மறுவாழ்வு பெற வசதியாக புன்னகை இல்லம் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நபா்கள் மீட்கப்பட்டனா். தனியாா் நிறுவனங்களில் பலா் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா்.