கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜோசப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, நீலக் கொடிச் சான்றிதழ் (புளூ பிளாக்) பெற்ற கடற்கரைப் பகுதியில் கடலிலிருந்து 10 மீ. தொலைவில் கட்டடங்களைக் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு கடலோரச் சுற்றுச்சூழல் விதிகளை தளா்த்தும் வகையில் உள்ளது. இதனால், கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மேலும், கடற்கரையில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவை கடல் சாா் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானவை. ஆகவே, நீலக் கொடி சான்றிதழ் பெற்று, கடற்கரையில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் வகையில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


